
சசிகலா விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்றும், அறம் சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என அதிமுக ஒருங்கினைப்பாளரும், துனை முதல்வருமான ஒ, பன்னீர் செல்வத்தின் இளைய மகன் ஜெய பிரதீப் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய மகன் ஜெய பீரதீப், ஆன்மிகம் தொடர்பான பல பணிகளில் ஈடுபட்டு வருபவர், கடந்த சில ஆண்டுகளாக தனது சகோதரும், தேனி தொகுதி நாடளுமன்ற உறுப்பினருமான ரவீந்தரநாத் வெற்றிக்கும், கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் வெற்றிக்கு பல்வேறு பணிகளை செய்தவர்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஜெய பீரதீப்பின் பதிவு ஒன்று அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரூவில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருக்கும் மதிப்பிற்குரிய அம்மையார் திருமதி சகிகலா நடராஜன் அவர்கள் பூரண குணமடைந்து இனி காலங்களில் எல்லாம் நல்ல உடல் நலம் பெற்று அறம் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல என்றும், என் மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்தபதிவு அதிமுக வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in
No comments:
Post a Comment