
வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப்பிரதேச எல்லையான காசிப்பூரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தவிட்டுள்ளதை அங்கு பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து அதிகளவில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் காசிப்பூர் எல்லையில் ஏராளமான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும், இல்லையேல் அகற்றப்படுவர் என அம்மாநில அரசு வியாழக்கிழமை மாலை எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ள பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத், நாங்ள் எங்கும் செல்லமாட்டோம் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று அறிவித்தார். இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு விவசாயிகளை வெளியேறுமாறு மாவட்ட நிர்வாகம் கூறியதை அடுத்து மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து போராட்டம் நடைபெறும் காசிப்பூருக்கு அதிகளவில் விவசாயிகள் குவிந்தனர். இதனால் அங்கு பதற்றம் கூடியதை அடுத்து அங்கு அதிகளவில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
காசிப்பூரில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
காசிப்பூர் எல்லையில் முகாமிட்டு போராடி வரும் விவசாயிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட விவசாய சங்கங்கள் முடிவு இன்று வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment