
நாராயணசாமி ஆட்சியில் புதுச்சேரி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் குற்றம்சாட்டினார்.
கடந்த சில நாட்களுக்கு முன், எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம், டெல்லியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் முன்னிலையில் அக் கட்சியில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நமச்சிவாயம், வளமான புதுச்சேரியை உருவாக்கவே பாஜகவில் இணைந்ததாக தெரிவித்தார்.
உலக அளவில் இந்தியாவை தலை நிமிர வைத்தவர் பிரதமர் மோடி என புகழ்ந்த நமச்சிவாயம், முதலமைச்சர் நாராயணசாமி ஆட்சியில் புதுச்சேரி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக குற்றம்சாட்டினார். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில், அதிக இடங்களில் வென்று புதுச்சேரி மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
No comments:
Post a Comment