
சொத்துக்குவிப்பு வழக்கில் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனை காலம்முடிந்தாலும் அவர்கள் வெளியேவராமல் சசிகலாவுக்காக காத்திருக்கின்றனர்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2017 பிப்ரவரி 14ம் தேதி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 4ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்தது. இதையடுத்து மூவரும் அதே ஆண்டுபிப்ரவரி 15ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாராசிறையில் சரணடைந்தனர். இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வரும் பிப்ரவரியுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இந்நிலையில் கடந்த நவம்பரில் சசிகலாவும், இளவரசியும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினர். இதையடுத்து சசிகலா தனக்கு சிறை விதிமுறையின்படி சலுகை காட்டி,முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சிறைத்துறையில் மனு அளித்தார். அந்த மனு பரிசீலனையில் உள்ள நிலையில், சசிகலா வரும்27ம் தேதி விடுதலையாக வாய்ப்புஇருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சிறைத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சுதாகரன் பெங்களூரு நீதிமன்றத்தில், 'நான் இவ்வழக்கில் 1996ம் ஆண்டு முதல்2017ம் ஆண்டு வரை 92 நாட்கள்சிறை தண்டனை அனுபவித்துள்ளேன். எனவே எனக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையில் இந்த 92 நாட்களை கழித்து, முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்''என கோரியிருந்தார். இதை கடந்த டிசம்பர் 17ம் தேதிஏற்ற நீதிமன்றம் அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதே போல இளவரசியும் இவ்வழக்கில் 50க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் இருந்துள்ளதால் அவரும் சுதாகரனுடன் முன்கூட்டியே வெளியே வருவார் என கூறப்பட்டது.
இந்நிலையில் சுதாகரன் தன்வழக்கறிஞர்களிடம், 'நான் சசிகலா, இளவரசிக்கு முன்னதாக சிறையில் இருந்து வெளியே வர விரும்பவில்லை. நானும் இளவரசியும் வெளியே வந்துவிட்டால் சசிகலா தனிமையில் வாட வேண்டிய நிலை ஏற்படும். மூன்று பேரும்ஒன்றாகவே வெளியே வருகிறோம். அதுவரை அபராதத்தை செலுத்தவேண்டாம். நான் வெளியே வருவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்'' என கேட்டுக்கொண்டுள்ளார். இதே போல இளவரசியும் சசிகலாவுக்கு முன்னதாக வெளியே வருவதை விரும்பவில்லை எனத் தெரிகிறது.
இதன் காரணமாக வழக்கறிஞர்கள் சுதாகரன் நீதிமன்றத்தில் அபராதத் தொகை கட்டுவதற்கான நடவடிக்கையும், இளவரசிவெளியே வருவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சசிகலாவுக்காக தண்டனைக் காலம்முடிந்தும் சுதாகரனும், இளவரசியும் காத்திருப்பதாக அவர்களுடைய வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment