
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ஆம் தேதி தமிழகம் வரும் போது அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியலில் நாளுக்கு நாள் புதுப்புது நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. அதனால் அரசியல் களம் தொடர்ந்து பரபரப்பாகவே உள்ளது. இந்நிலையில் அமைச்சர்கள் யாரும் இல்லாமல் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் ஒரே காரில் பயணித்திருப்பது விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.
அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை, ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தாலும் கூட, அவர் முழு மனதுடன் அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது. வரும் தேர்தல் தனது அரசியல் பயணத்திற்கு மிக முக்கியம் என கருதும் ஓபிஎஸ், ரஜினி அரசியலுக்கு வந்தால், அதைத் கொண்டு காய்களை நகர்த்த முடிவு செய்தார்.

ஆனால் ரஜினி அரசியலுக்கு வராததால் ஓபிஎஸ் பாஜகவையே நம்பி இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசுடன் ஓபிஎஸ் தான் நெருக்கமாக இருக்கிறார். அதனால் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க ஓபிஎஸ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
வரும் 14ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார். அப்போது ஓபிஎஸின் ஆதரவாளர்கள் பெருமளவில் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி இணைந்தால் பாஜக தேசிய தலைமை ஓபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது.

இதையெல்லாம் தெரிந்து கொண்ட முதலமைச்சர் ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் தனியே காரில் பயணித்து இதுகுறித்து பேசியதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதன் க்ளைமாக்ஸ் அமித் ஷா வந்த பிறகே தெரியவரும்.
newstm.in
No comments:
Post a Comment