
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் லக்கன். சில தினங்களுக்கு முன்பு இவரை அணுகிய 5 பேர் கொண்ட குழு, வரும் ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு வருமாறும் அங்கு ஆச்சரியம் காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் கூறிய வீட்டுக்கு ராம் லக்கன் சென்றுள்ளார். அங்கு ஏற்கெனவே 30 பேர் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அந்த 5 பேர், அவர்கள் அனைவரையும் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி வற்புறுத்தியுள்ளனர். மேலும், கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்பட்சத்தில், வேலையும் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு வசதியும் செய்து தருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனை ராம் லக்கன் உட்பட அங்கிருந்த சிலர் ஏற்க மறுத்ததும், அவர்களிடம் அந்த 5 பேரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த இந்து அமைப்பினர் சிலர் அங்கு வந்து, அந்த 5 பேரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்களில் டேவிட், ஜெகன் ஆகிய இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் ஷாஜகான்பூரைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.
இது தொடர்பாக ராம் லக்கன் அளித்த புகாரின் பேரில், உ.பி. புதிய மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் போலீஸார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என ஷாஜகான்பூர் எஸ்.பி. ஆனந்த் கூறினார்.
No comments:
Post a Comment