
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் இன்று கருத்து கேட்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதால் மீண்டும் பள்ளிகளை திறக்க அரசு முடிவெடுத்தது. ஏற்கனவே நவம்பர் மாதம் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க கருத்து கேட்கப்பட்ட நிலையில் பெற்றோரின் எதிர்ப்பையடுத்து அந்த முடிவு கைவிடப்பட்டது.
இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு 10,12 வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறப்பது பற்றி இன்று முதல் ஜனவரி 8 வரை கருத்து கேட்பு நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் 5 மணி வரைநாளொன்றுக்கு 100 பெற்றோர்களிடம் எழுத்துப்பூர்வமாக கருத்து கேட்பு நடைபெறுகிறது. பெற்றோர், ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோரை அழைத்து கருத்து கேட்க வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் விடுமுறை முடிந்த பின்னர் பள்ளிகளின் வசதிக்கேற்ப கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. பெற்றோரிடம் இருந்து பெறப்படும் கருத்துக்கள் முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அறிக்கையை தொகுத்து பள்ளி கல்வி இயக்ககத்திற்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment