
ஷில்லாங்: இந்துக்கள் கிறிஸ்துமஸ் தினத்தில் தேவாலயங்கள் போனால் அவர்களை அடிப்போம் என பஜ்ரங் தளம் அமைப்பு தலைவர் சர்ச்சை கருத்து கூறி உள்ளார்.
இவர் ஏற்கனவே லவ் ஜிகாத் குறித்து சர்ச்சை கருத்து கூறியவர் ஆவார். இந்து-கிறிஸ்தவர்கள் ஒற்றுமையை சீர்குலைக்க பார்க்கிறார் என அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விஸ்வ இந்து பரிஷத்தின் பஜ்ரங் தளம் அமைப்பு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருவது வாடிக்கையாகி விட்டது. அந்த அமைப்பின் மாவட்ட பிரிவின் பொதுச் செயலாளர் மிது நாத் லவ் ஜிகாத் குறித்து சர்ச்சையாக பேசியது பரபரப்பை உண்டாக்கியது. இந்த நிலையில் அவர் மீண்டும் சர்ச்சை கருத்துக்களை கூறி உள்ளார். அசாம் மாநிலம் கோச்சாரில் நடந்த நிகழ்ச்சியில் அமைப்பின் உறுப்பினர்கள் மத்தியில் அவர் கூறியதாவது:-
பாஜகவை எப்படி தடுத்தோம் பாருங்க.. மத்த மாநிலங்களும் கத்துக்கோங்க.. தெலுங்கானா முதல்வர் மகள் கவிதா
கிறிஸ்துமஸ் தினத்தில் இந்துக்கள் தேவாலயங்களுக்கு போனால் கடுமையாக அடி கொடுக்கப்படும். ஷில்லாங்கில் கிறிஸ்தவர்கள் கோயில்களை பூட்டி வைக்கின்றனர். ஆனால் நாம் அவர்களோடு சேர்ந்து பண்டிகை கொண்டாடுகிறோம். இது நடக்கக்கூடாது. இதை அனுமதிக்க மாட்டோம். டிசம்பர் 26ஆம் தேதி தலைப்புச் செய்தி என்னவாக இருக்குமென எனக்கு தெரியும்.ஓரியண்டல் பள்ளியை பஜ்ரங் தளத்தின் ரவுடிகள் சேதப்படுத்திவிட்டனர் என எல்லா செய்தித்தாள்களிலும் செய்தி வரப்போகிறது. ஆனால் எங்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இந்துக்கள் கொண்டாட அனுமதிக்கமாட்டோம்.
நம்மை குண்டர்கள் என ஊடகங்கள் கூறுகின்றன. நமது இந்து பெண்கள் மீது கை வைத்தாலோ, தொல்லை கொடுத்தாலோ நாம் குண்டர்களாக மாறிவிடுவோம். இதில் பெருமை கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.இந்த சர்ச்சை பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்துக்கள்-கிறிஸ்தவர்கள் ஒற்றுமை சீர்குலைவதே இது போன்ற ஆட்களால்தான் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
source: oneindia.com
No comments:
Post a Comment