லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது
செய்யும் வகையில் தனி சட்டம் கொண்டு வருவது குறித்து பதிலளிக்க வேண்டும் என
தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை
பம்மலில் உரிய கட்டணங்கள் செலுத்தி விண்ணப்பித்து ஓராண்டு கடந்த பிறகும்
தாத்தாவின் சொத்துக்களை பாகப் பிரிவினை செய்து பத்திரப் பதிவு செய்யாமல்
இருப்பதாகவும், பத்திரப்பதிவை முடித்து பத்திரங்களை வழங்க பம்மல் சார்
பதிவாளருக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஆலந்தூரை சேர்ந்த பூபதி என்பவர் வழக்கு
தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது, கடந்த 10
ஆண்டுகளில் லஞ்சம் பெற்ற 77 அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு
செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசின்
அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி ஆசியாவிலேயே அதிக ஊழல் நடைபெறும்
நாடு இந்தியா என்பது வேதனையளிப்பதாக தெரிவித்தார். ஊழல் தடுப்புச் சட்டம்
நடைமுறையில் இருந்தாலும் அதிக அளவில் அரசு அலுவலகங்களில் தான் ஊழல்
நடைபெறுவதாக தெரிவித்தார்.
லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகளை தடுப்பு
காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஏன் புதிய சட்டம் இயற்றகூடாது என நீதிபதி
கேள்வி எழுப்பினார். மேலும் புதிய சட்டம் கொண்டு வரும்வரை ஏன் குண்டர்
சட்டத்தின் கீழ் கைது செய்ய கூடாது எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதி கடந்த
10 ஆண்டுகளில் லஞ்சம் பெற்றதாக 77 அரசு அதிகாரிகள் மீது மட்டுமே வழக்கு
பதிவு செய்யப்பட்டதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
மேலும், கடந்த
10 ஆண்டுகளில் அரசு அலுவலகங்களில் எத்தனை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன?
எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்? எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது? அதிகளவில்
லஞ்சம் புழங்கும் முதல் 5 அரசு துறைகள் என்ன ? லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை
நடத்தும் போது ஏற்படும் பிரச்சினைகள் என்ன? சோதனையின் போது நவீன
தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றவா?
லஞ்ச ஒழிப்பு துறைக்கு
போதிய நிதி ஒதுக்கப்படுகிறா? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு
டிசம்பர் 11 ம் தேதி பதில் அளிக்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில்
லஞ்ச ஒழிப்பு ஆணையர், லஞ்ச ஒழிப்புத்துறை, தலைமை செயலக செயலர், உள்துறை
போன்றவைகளையும் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment