
புதுடில்லி: கொரோனா தடுப்பூசியின் சோதனை முயற்சியில் பங்கேற்ற, ஹரியானா
மாநில உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா
உறுதியாகியுள்ளது.ஹரியானா மாநிலத்தில் , பாஜ.,வின் மூத்த தலைவரும், மாநில
உள்துறை மற்றும் சுகாதார அமைச்சராக இருப்பவர் அனில் விஜ். பாரத் பயோடெக்
நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை மூன்றாவது கட்ட
பரிசோதனையின்போது, அனில் விஜ் கடந்த நவ.,20ம் தேதி தனது உடலில் செலுத்தி
கொண்டார்.இந்நிலையில், அனில் விஜ் டுவிட்டரில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்
கூறியுள்ளதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என
தெரிவித்துள்ளார்.பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் இது தொடர்பாக பயோடெக்
நிறுவனம் வெளியிட்ட விளக்கம்: கோவாக்சின் மருத்துவ பரிசோதனை, 2 டோஸ்
வழங்கப்பட்டு செய்யப்படும். முதல் டோஸ் செலுத்தி 28 நாள் இடைவெளியில்
அடுத்த டோஸ் வழங்கப்படும். 2வது டோஸ் மருந்து செலுத்தப்பட்டு 14வது
நாளுக்கு பின்னர் தான் தடுப்பூசியின் திறன் தீர்மானிக்கப்படும். இவ்வாறு
அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment