புதுச்சேரியில் காங்கிரஸை தொடர்ந்து இளைஞர் காங்கிரஸி லும் உட்கட்சி பிரச் சினை விஸ்வ ரூபமெடுத்துள்ளது. அமைச்சர் முட்டுக்கட்டை போடுவதாக குற்றம்சாட்டி மாநில துணைத் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய் துள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸில் உள்ள உட்கட்சி பூசல் இளைஞர் காங்கி ரஸையும் விட்டு வைக்கவில்லை. கடந்த 16-ம் தேதி புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்கட்சி அலுவலகத்தில் நடைபெற் றது. மேலிடப் பொறுப்பாளர் லெனின் பிரசாத் முன்னிலையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இரு கோஷ்டிகளாக பிரிந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மேலிடப் பொறுப் பாளர் கடும் அதிருப்தி அடைந்தார். மோதலை தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலை வர் ஜெயதீபன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அங்கிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் நேற்று அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியனிடம் அளித்துள்ளார். அதில், 'நான் இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவராக பொறுப்பு வகிப்பது அமைச்சர் கந்தசாமிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் இளைஞர்காங்கிரஸில் பொறுப்பில் உள்ளதனது மகனை தூண்டிவிட்டு தொடர்ந்து நான் பணிபுரிய தடை யாக உள்ளார்.
இளைஞர் காங்கிரஸ் அமைப்பை அமைச்சர் செயல்பட விடாமல் தனது மகன் மூலம் முட்டுக்கட்டை போட்டுள்ளார். இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவராக நான் இருப்பதால் சட்டமன்ற சீட்டை பெற்று விடு வேனோ என்ற அச்சம் அவருக்கு உள்ளது.
இதன் காரணமாக இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தும், இந்திய தேசிய காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நான் விலகிக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment