மும்பை: விவசாயிகள் போராட்டத்தில் பயங்கரவாதிகளும் பங்கெடுக்க
தொடங்கியுள்ளதாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சைக்குரிய கருத்தை
தெரிவித்துள்ளார்.வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில், விவசாயிகள் 9வது
நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில்
இப்போராட்டத்தில் பங்கேற்ற 80 வயதுள்ள ஒரு மூதாட்டியின் புகைப்படத்தை
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், போராட்டத்திற்கு மூதாட்டியை 100 ரூபாய்
கொடுத்து அழைத்து வந்துள்ளதாக பதிவிட்டிருந்தார். கங்கனாவின் இந்த கருத்து
சர்ச்சையான நிலையில் அந்த டுவிட்டர் பதிவை நீக்கினார். தற்போது விவசாயிகள்
போராட்டம் குறித்து மற்றுமொரு கருத்தை தெரிவித்து மீண்டும் சர்ச்சையில்
சிக்கினார்.நேற்று (டிச.,19) தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட
வீடியோவில் அவர் பேசியதாவது: நாட்டு மக்களிடம் சில கேள்விகளைக் கேட்க
விரும்புகிறேன்.
ஒட்டுமொத்த விவசாயப் போராட்டமும் அரசியல் கட்சிகளால்
தூண்டி விடப்பட்டுள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை. பயங்கரவாதிகளும் அதில்
பங்கெடுக்க தொடங்கியுள்ளனர். நான் படித்தது, வளர்ந்தது எல்லாமே பஞ்சாப்
மாநிலத்தில்தான். அங்கிருக்கும் 99 சதவீத மக்கள் காலிஸ்தானை விரும்பவில்லை.
அவர்கள் நாட்டை நேசிக்கிறார்கள். நாட்டைப் பிரிக்க அவர்கள் விரும்பவில்லை.பயங்கரவாதிகளுக்கும், அந்நிய நாட்டு சக்திகளுக்கும் முன்னால் நாம் பலவீனமானவர்களாகி விட்டோமா? ஒவ்வொரு நாளும் நான் என்னுடைய நோக்கங்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டியிருக்கிறது. இத்தனைக்கும் நான் ஒரு தேசப்பற்றாளர்.
ஆனால், திலிஜித் தோசான்ஜ் மற்றும் பிரியங்கா சோப்ரா போன்றோர் செய்து கொண்டிருப்பது என்ன? ஏன் அவர்களை யாரும் கேள்வி கேட்பதில்லை? நாட்டுக்காக நான் செய்வது அரசியல் என்றால் அவர்கள் செய்வது என்ன? தயவுசெய்து அவர்களிடம் கேளுங்கள். இவ்வாறு கங்கனா பேசினார்.

No comments:
Post a Comment