
மதுரை அடுத்து உசிலம்பட்டி அருகே உள்ள நக்களப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி வயது(30). இவரது மனைவி பெயர் சூர்யா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர் . இதில் முத்துப்பாண்டியின் மனைவி சூர்யா கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மரணித்து விட்டார். இதையடுத்து அவரது குழந்தைகள் உறவினர் வீட்டில் வளர்ந்து வருகிறார்கள் . இதில் முத்துப்பாண்டி தனது தாயாருடன் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள துடுப்பதி ஸ்லேடர்நகர் என்ற பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து சிமெண்ட் ஷீட் பொருத்தும் பணிக்கு போய் வந்துள்ளார் . இந்நிலையில் நேற்று இரவு வேலைக்கு சென்ற முத்துப்பாண்டி பின்னர் வீடு திரும்பவில்லை. இதன்பிறகு துடுப்பதி செல்லும் சாலையில் சானடோரியம் அருகில் முத்துப்பாண்டி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர் .
No comments:
Post a Comment