
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரஹணம், நாளை நிகழ உள்ளதாக பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர், சவுந்திரராஜ பெருமாள் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரஹணம், நாளை நிகழ உள்ளது. சூரியனுக்கும், பூமிக்கும் இடையே, சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது, சூரிய கிரஹணம் ஏற்படுகிறது.

நாளை நடக்கவுள்ள சூரிய கிரஹணம், இரவு, 7 மணி 4 நிமிடத்தில் துவங்கும்; பின்னர் இரவு, 9 மணி 43 நிமிடத்தில் உச்சம் பெற்று, 15 -ம் தேதி அதிகாலை, 12 மணி 23 நிமிடத்தில் நிறைவு பெறும்.இந்த சூரிய கிரஹணம் இரவில் நடப்பதால், முழு சூரிய கிரஹணத்தையும் இந்தியாவில் பார்க்கமுடியாது.
ஆனால், சிலி, அர்ஜென்டினாவில் அமைந்துள்ள டெமுகோ, வில்லாரிகா, சியரா கொலராடா உள்ளிட்ட ஒரு சில நகரங்களில், சூரிய கிரஹணம் தெரியும் என்றார். மேலும், நாளை பெறுவது முழு சூரிய கிரஹணம், பகுதி சூரிய கிரஹணம், வளைய சூரிய கிரஹணம் என, பல வகைப்படுத்தப்பட்டுள்ளது
இந்த ஆண்டு ஐந்து சந்திர கிரஹணங்கள் மற்றும் சூரிய கிரஹணங்கள் நிகழ்ந்துள்ளன. அதில், ஜூன், 5 பவுர்ணமி நாளில் சந்திர கிரஹணம் நிகழ்ந்தது. நாளை இரவு, ஆண்டின் கடைசி சூரிய கிரஹணம் நிகழ உள்ளது. இதற்கு முன்பு ஜூன், 21 -ம் தேதி சூரிய கிரஹணம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment