
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள எஸ். ஆலாம்பாளையம் கிராமத்தில் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 150 பேர் உறுப்பினராக உள்ளனர்.
பால் விவசாயிகள் தினந்தோறும் பாலை கறந்து இந்த கூட்டுறவு சங்கத்தில் விற்பனை செய்து வந்தனர். விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து ஆவின் நிர்வாகத்திற்கு அனுப்பிவைத்தனர். இன்று மீண்டும் பால் கொண்டு வந்த விவசாயிகளிடம் நேற்று அனுப்பிய பால் தரம் குறைவாக இருப்பதால் பணம் தர முடியாது என கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதற்கு பால் உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலில் தரம் குறைவு என்றால் எம்மாதிரியான தரம் குறைவு? அது எப்படி சரி செய்ய வேண்டும் என முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். ஆனால் பாலை கொள்முதல் செய்து விட்டு பணம் தராமல் திருப்பி பாலை எடுத்துச் செல்லும் போது, அதனை எடுத்துக்கொள்ள மறுப்பது என்பது நியாயமானது அல்ல எனக் கூறி அங்குள்ள பால் விவசாயிகள் சாலையில் கொட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த ஈரோடு மாவட்ட ஆவின் நிர்வாகிகள் விவசாயிகளும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு கண்டனர். கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கு உரிய விலை தருவதாக உறுதி அளித்து அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். வழக்கமாக பாலின் கொழுப்புச் சத்து அளவு 27 முதல் 28 டிகிரி வரை இருந்தால் கொள்முதல் செய்யப்படும் எனவும் தற்போது திருப்பி அனுப்பப்பட்ட பாலின் கொழுப்புச் சத்து அளவு 25 டிகிரி மட்டுமே உள்ளதாக ஆவின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட காரணத்தை அடுத்து விவசாயிகள் இந்த போராட்டத்தில் குதித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment