
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் தலைமை தபால் நிலையத்தை 2 ஆவது நாளாக முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் 78 பேரை காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர், ரயில் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையத்தை 2ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சி.மூர்த்தி தலைமை வகித்தார். இதில், பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியினர் செங்கொடி மற்றும் மக்காச்சோளப் பயிர்களை ஏந்தியபடி வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
No comments:
Post a Comment