
இந்தியாவில்புகழ் பெற்ற தனியார் வங்கியான HDFC வங்கி, புதிய கிரெடிட் கார்டுகளை வாடிக்கையயாளர்களுக்கு வழங்க ரிசர்வ் தற்காலிக தடை விதித்துள்ளது. .
இந்தியாவில் அரசு வங்கிகளுக்கு இணையான சேவை வழங்கி, வாடிக்கையாளர்கள் மனதில் பிடித்த தனியார் வங்கிகளில் HDFC-யும் ஒன்று. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் பல்லாயிரணக்காக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் HDFC வங்கியின் டிஜிட்டல் சேவைகள் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி முதல் முடங்கியது. மேலும், நவம்பர் 22 காலை வரை சுமார் 12 மணி நேரம் முழுமையாக முடங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக HDFC வங்கியின் டிஜிட்டல் சேவை தடைப்பட்டதற்கான காரணம் குறித்து ரிசர்வ் வங்கி விசாரணை நடத்தியது. இதற்கு, டேட்டா மையத்தில் மின்தடை காரணம் என கூறி ஹெச்டிஎப்சி வங்கி சமாளித்தது.
இந்நிலையில், HDFC வங்கி புதிய கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல டிஜிட்டல் 2.0 திட்டத்தில் இருக்கும் புதிய டிஜிட்டல் திட்டங்களை அறிமுகம் செய்வதை நிறுத்த உதத்ரவிட்டது. மேலும், ஐடி சேவைகள் மூலம் நடவடிக்ககைளை நிறுத்தவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment