
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தமிழக துணைமுதல்வர் ஓ பன்னேர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி கூட்டாக சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 9 -1 -2021 சனிக்கிழமை காலை 8 .50 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் கழக அவைத் தலைவர் மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.

கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.
உறுப்பினர்கள் அனைவரும் COVID-19 பரிசோதனை செய்து அதற்கான சான்றிழதோடும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழகப் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment