
சீனாவின் வூஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் தன்மை கொண்டது என்பதை ஆய்வாளர்கள் ஏற்கனவே எச்சரித்தனர். பிரிட்டனில் தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸின் புதிய வகைமாதிரியான VUI-202012/01 என்பது அங்கு புதிய கவலைகளையும் பீதிகளையும் ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் கிங்ஸ் மருத்துவமனை பேராசிரியரும் வைரல் ஆய்வாளருமான ஸ்டூவர்ட் நீல் சில வாரங்களுக்கு முன்பாக இந்த புதிய கொரோனா வகை லண்டனின் சில பகுதிகளில் 10-15% நோயாளிகளில் இருந்ததாக கண்டுப்பிடிக்கப்பட்டது ஆனால் தற்போது 60% ஆக அதிகரித்துள்ளதாகத் கூறியுள்ளார்.
மியூட்டேஷன்
என்று அழைக்கப்படும் வைரஸின் உருவம் மற்றும் தன்மை மாற்றம் என்பது வைரஸ்
இரட்டிப்பாகும் போது மரபணு தொடரில் ஏற்படும் மாற்றமாகும்.
செல்லில் கொரோனா வைரஸ் பீடித்துள்ளதோ அந்த செல்லில் மரபணு
மூலக்கூறை செலுத்தும், அப்போது உடல் செல் வைரஸ் தன்னை இரட்டிப்பாக்கிக்
கொள்வதை எதிர்த்துப்
போராடும், ஆனாலும் இந்த வைரஸ் வகை அதையும் மீறி தன்னை தக்கவைத்துக் கொள்ளும்
வழிமுறைகளைக் கண்டுப்பிடித்துக் கொள்ளும்.
இதன்
மூலம் தன்னை தகவமைத்துக் கொண்டு வளர்ச்சியடையும்.நாவல் கொரோனா வைரஸ்
இதுவரை தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கான மாற்றங்களை அடைந்திருந்தாலும்
ஆனால் இவற்றில் சில வகைகள்
மட்டுமே அச்சுறுத்தலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment