வேளாண் சட்டங்களின் நன்மைகள் தெரியாமல் பேசுபவர்கள், முட்டாள்கள், அயோக்கியர்கள் என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, வேளாண் சட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் தேவையில்லாமல் குழப்பத்தை திமுக ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பாஜக தக்க பதிலடி கொடுக்கும்.

மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே திமுக இப்படி செய்து வருகிறது. வேளாண் சட்டங்களின் நன்மைகள் தெரியாமல் பேசுபவர்கள், முட்டாள்கள், அயோக்கியர்கள். உண்மையை தெரிந்து பேச வேண்டும்.
டெல்லியில் உச்ச நீதிமன்றத்தில் 2ஜி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதை நினைவில் வைத்து ஆ.ராஜா பேச வேண்டும். அவரால் வரும் ஜனவரி 31 -ம் தேதி வரை தான் இப்படி பேசமுடியும். அதற்கு மேல் பேசமுடியாது.
திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் போன்ற தீய சக்திகளை பொது மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

No comments:
Post a Comment