
சேலம்: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் இன்று தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும் இந்த பொங்கல் பரிசு ஜனவரி மாதம் 4-ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும், இந்த பொங்கல் பரிசு சுமார் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment