
நாட்டில் திட்டமிடப்படாமல் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதுமான கரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது.
இந்நிலையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளைக் குறித்து மத்திய அரசை ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். தனது சுட்டுரைப் பதிவில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், " கிட்டத்தட்ட 1.5 லட்சம் இறப்புகளுடன் 1 கோடி கரோனா தொற்று உள்ளது. பிரதமர் கூறியது போல் திட்டமிடப்படாத பொதுமுடக்கத்தால் 21 நாள்களில் கரோனா போரில் வெற்றி பெற முடியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் திட்டமிடப்படாத பொதுமுடக்கத்தால் நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்" என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment