
சென்னை: தமக்கு உயிரை பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லை என மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் நடிகர் ரஜினிகாந்த் இன்று உருக்கமாக பேசினாராம்.
சென்னையில் மக்கள் மன்றத்தின் 37 மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார். சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில்தான் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தமது உடல்நலம் குறித்து கூறும்போது உருக்கமாக பேசினாராம். ஏற்கனவே உடல்நிலை பாதிப்பு இருக்கிறது.. கொரோனா காலம் வேற.. இந்த சூழ்நிலையில் மீண்டும் உடல்நிலை பாதிச்சதுன்னா...
கொரோனாவுக்கு சிகிச்சை எடுக்கும் போது ஏற்கனவே பாதிக்கப்பட்டதால சிறுநீரகத்துக்கும் பிரச்சனை வரும்னு மருத்துவர்கள் சொல்றாங்க.. எனக்கு என் உயிரை பற்றி எல்லாம் கவலை இல்லை.. இருந்தாலும் போனமா ஜெயிச்சமானு இருக்கனுமே என குறிப்பிட்டிருக்கிறார்.
என் முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன்: ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்தின் இந்த உருக்கமான பேச்சால் மாவட்ட செயலாளர்கள் சிலர் கண்ணீர் விட்டிருக்கின்றனர். மேலும் எங்களுக்கு கட்சி, அரசியலைவிட தலைவா! உங்க உடல்நிலைதான் முக்கியம் என கதறியும் அழுதனராம்.
source: oneindia.com
No comments:
Post a Comment