
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசைக் கண்டித்தும் விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் மற்றும் அருப்புக்கோட்டையில் வங்கிகளை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர்.
வேளாண் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் ஸ்டேட் பேங்க் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
நகரச் செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் சுகந்தி, மாவட்ட செயலாளர் கே.அர்ஜுனன் ஆகியோர் முற்றுகை போராட்டம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கணேசன், ராமர், ஜோதிலட்சுமி, மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், கிழக்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி திருவில்லிபுத்தூர் நகரச் செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது, விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். அதையடுத்து, முற்றுகையில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 52 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
இதேபோன்று, அருப்புக்கோட்டையிலும் இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment