
உலகச் சுகாதார நிறுவனம், கொரோனா கிருமித்தொற்றின் தொடக்கம் பற்றிய விசாரணையைத் தொடர, மீண்டும் சீனாவின் வூஹான் நகருக்கு அதன் குழுவினரை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. அந்த 10 பேர் கொண்ட குழு, கிருமித்தொற்றின் ஆரம்ப காலத்தில் பாதிக்கப்பட்டவர்களை விசாரிக்கவுள்ளது. நோய்ப்பரவல் தொடங்கியதாக நம்பப்படும் மொத்த உணவுச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் குழுவினர் பரிசீலிக்கவுள்ளனர். வௌவால்களிடம் இருந்து நோய் பரவியதா எனும் கேள்விக்கு அதன் மூலம் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகச் சுகாதார நிறுவனம், அதன் குழுவினரை அனுப்புவதற்குச் சீனா அனுமதியளித்துள்ளதாகத் தெரிவித்தது. ஆனால், முதன்முதலில் COVID-19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள், நோய் குறித்த விவரங்களை வெளியிட்டால், அவர்கள் வேவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் என்று சீன அதிகாரிகள் மிரட்டியதாய் நம்பப்படுகிறது. மற்ற மருத்துவ ஊழியர்களும் கிருமிப்பரவல் நிலவரம் குறித்துத் தகவல் வெளியிடாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment