koyambedu market price koyambedu vegetable
koyambedu market price koyambedu vegetable : சென்னையில் இந்த மாதத் தொடக்கம் முதலே காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் காய்கறிகளின் விலையும் தொடர்ந்து ஏற்றத்திலேயே இருக்கிறது. நேற்றும் விலையேற்றம் காணப்பட்ட நிலையில், இன்று விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு சில காய்கறிகளின் விலை சிறிதளவு குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை இன்று 30 ரூபாயாக உள்ளது. நேற்றும் இதே விலைக்குத்தான் விற்பனை செய்யப்பட்டது.
பீன்ஸ் விலை நேற்று 55 ரூபாயிலிருந்து இன்று 40 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. பீட்ரூட் விலை 45 ரூபாயாகவே உள்ளது. அவரைக்காய் விலை 45 ரூபாயாகவும், கத்தரிக்காய் விலை 45 ரூபாயாகவும் உள்ளது.
காய்கறிகளின் விலைப் பட்டியல்:
தக்காளி - ரூ.30
அவரைக்காய் - ரூ.45
பீன்ஸ் - ரூ.40
பீட்ரூட் - ரூ.45
பாகற்காய் - ரூ.30
கத்தரிக்காய் - ரூ.45
முட்டைகோஸ் - ரூ.20
குடை மிளகாய் - ரூ.40
கேரட் - ரூ.70
காளிபிளவர் - ரூ.25
சவுசவு - ரூ.12
வெள்ளரிக்காய் - ரூ.10
முருங்கைக்காய் - ரூ.80
இஞ்சி - ரூ.90

No comments:
Post a Comment