கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் கூறுவது அனைத்தையும் ஏற்க முடியாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதை செய்ய அரசியல் கட்சியினர் கோருவது ஏற்புடையது அல்ல என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார்.
கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகளாகத்தான் கருதவேண்டுமே தவிர, தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் , ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கவேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என திமுக அமைப்பு செயலாளர் ஆர் . எஸ் . பாரதி தெரிவித்துள்ளார் .
மேலும் கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் கட்சி சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் , தேர்தல் கூட்டணி என்பது வேறு , கட்சிக் கொள்கை என்பது வேறு எனவும் அவர் கூறியுள்ளார் .
காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருப்பது தெரிந்துதான் 7 பேர் விடுதலையை திமுக வலியுறுத்துகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார் .
newstm.in

No comments:
Post a Comment