மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்குக்கு இதுவரை 27,400 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வுக்கு 3ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. tnmedicalselection.org என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கான தரவரிசை பட்டியல் 16ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 18ம் தேதிக்கு பிறகு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுவரை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு இதுவரை 27,400 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். விண்ணப்பங்களை வரும் 12ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்றும் தவறுதலாக பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment