அடுத்தாண்டு தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விறுவிறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் பாஜக வேல் யாத்திரையை தொடங்கியுள்ளது. அவை தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட வீடியோவில் அதிமுக நிறுவனர் தலைவர் எம்ஜிஆர் புகைப்படம் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் தற்போது மதுரையில் காங்கிரஸ் எம்பிக்கு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரத்தின் பிறந்தநாள் வருகின்ற 16ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதனையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் அச்சடித்து மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்டரில் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆருக்கு, ஜெயலலிதா மதுரையில் நடைபெற்ற விழா ஒன்றில் செங்கோல் வழங்குவார். அந்த புகைப்படத்தை போலவே எம்.ஜி.ஆருக்கு கார்த்தி சிதம்பரம் செங்கோல் அளிப்பது போல வடிவமைத்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
newstm.in

No comments:
Post a Comment