தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்துக்கு உட்பட்டது திருமலாபுரம்
ஊராட்சி ஒன்றியம். அரப்படித்தேவன்பட்டி, க.விலக்கு சிலோன் காலனி என பல
கிராமங்களை உள்ளடக்கியது திருமலாபுரம் ஊராட்சி ஒன்றியம்.
இப்பஞ்சாயத்துக்குட்பட்ட அரப்படித்தேவன்பட்டி அருகே உள்ளது ஏடி காலனி. இந்த
காலனியில் மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழக அரசால் ஆதிதிராவிட
மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட வீடுகளில் 50 குடும்பங்கள் வசித்து
வருகின்றனர்.
இப்பகுதியைச் சுற்றி தனியார் நர்சிங் கல்லூரி மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களே உள்ளது. அவர்கள் தங்களது இடத்தை பாதுகாக்க சுற்று சுவர்கள் அமைத்துள்ளனர். இதனால் மழை காலங்களில் மழைநீர் வெளியேற முறையான வடிகால் இல்லாததால் காலனிக்குள்ளே தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்த கனமழை காரணமாக காலனி பகுதியில் ஒரு அடிக்கு மேல் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து திருமலாபுரம் பஞ்சாயத்து தலைவரிடம் புகார் அளித்துள்ளனர். ஒரு அடிக்கு மேல் அங்கு தேங்கிய மழை நீரை வெளியேற்றுவதற்கு திருமலாபுரம் பஞ்சாயத்து சார்பாக துப்புரவு பணியாளர்கள் டிராக்டரில் பிளாஸ்டிக் டிரம்களுடன் வந்ததை பார்த்து திகைத்த அப்பகுதி மக்கள் பிளாஸ்டிக் டிரம்கள் எதற்கு என பணியாளர்களிடம் கேட்டதற்கு மழை நீரை டிரம்களில் நிரப்பி அப்புரப்படுத்த வந்துள்ளோம் என்று பதில் அளித்ததை கேட்டு அப்பகுதி மக்கள் நகைத்தனர்.
பின்னர் தேங்கிய மழை நீரை ஐந்துக்கு மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் வாளியில் இறைத்து ட்ரம்களில் நிரப்பி அப்புறப்படுத்தினர். மழை நீரை மின் மோட்டார் உதவியுடன் அப்புறப்படுத்துவார்கள் என நினைத்த நிலையில் வாளியில் இறைத்து அப்புறப்படுத்திய சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தினாலும் ஒரு வழியாக மழை நீர் அப்புறப்படுத்தினாலே போதும் என அப்பகுதி மக்கள் முனுமுனுத்தனர்.

No comments:
Post a Comment