சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017 பிப்ரவரி 15ஆம் தேதி அடைக்கப்பட்டார். சசிகலாவின் சிறை தண்டனை அடுத்தாண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது.
அவருக்கு நான்காண்டு சிறை தண்டனையுடன் தலா ரூ.10 கோடியே 10 லட்சம் அபராதமும் நீதிமன்றம் விதித்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்ற கட்டிடத்தில் உள்ள 34வது சிறப்பு நீதிமன்றத்தில், சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்த அனுமதிக்கக்கோரி வக்கீல் பி.முத்துகுமார் மனுதாக்கல் செய்தார்.

அதைஏற்றுக்கொண்ட நீதிபதி, அபராதத் தொகை செலுத்த அனுமதி வழங்கினார். அதனைத் தொடர்ந்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் பி.முத்துகுமார் ரூ.10.10 கோடிக்கான காசோலையை செலுத்தினார்.
தற்போது யார் யார் பெயரில் அபராதம் பணம் செலுத்தப்பட்டது என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், வசந்தாதேவி பெயரில் ரூ.3.25 கோடி, பழனிவேல் பெயரில் ரூ.3.75 கோடி, ஹேமா பெயரில் ரூ.3 கோடி மற்றும் விவேக் பெயரில் ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.10 கோடியே 10 லட்சத்திற்கான நான்கு டி.டிக்களை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.முத்துகுமார் செலுத்தினார்.

இதில் வசந்தாதேவி மற்றும் பழனிவேல் ஆகியோர் சென்னையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிலும் ஹேமா மற்றும் விவேக் ஆகியோர் ஆக்சிஸ் வங்கியிலும் டி.டி. எடுத்திருந்தனர். இவர்கள் 4 பேரும் சசிகலாவின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதை தொடர்ந்து முறைப்படி சசிகலா செலுத்த வேண்டிய அபராத தொகை செலுத்தியுள்ளதற்கான தகவலை நீதிமன்றம் மூலம் முறைப்படி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளருக்கு நேற்று தெரிவிக்கப்பட்டது. இவர்களுக்கு மனமுருகி நன்றி தெரிவித்துள்ளார் சசிகலா. வரும் ஜனவரி 27ம் தேதி சசிகலா சிறையிலிருந்து வெளியே வருவது உறுதியாகியுள்ளது.
newstm.in

No comments:
Post a Comment