இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வரும் பிப்ரவரி மாதம் கிடைக்கும் என்றும், அதன் விலை ரூ.1000 -மாக இருக்கும் என சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் தாக்கம் தற்போதும் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இதனால், கொரோனாவுக்கு எப்போது தடுப்பூசி கிடைக்கும் என பொது மக்கள் ஏங்கி வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பணிகள் இறுதி கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. இந்த நிலையில், சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனமும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் முனைப்பு காட்டி வருகிறது.
இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனாவாலா, செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆக்ஸ்போர்ட் கோவிட் -19 தடுப்பூசி 2021 பிப்ரவரியில் கிடைக்கும். முதலில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயது மூத்தவர்களுக்கு செலுத்தப்படும். இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இரண்டு டோஸ் கொண்ட இந்த தடுப்பூசி 1000 ரூபாய் என விலை நிர்ணம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

No comments:
Post a Comment