
பிரதமர் மோடியை ஐக்கிய ஜனதாதளக் கட்சி அவமானப் படுத்தி விட்டதாக லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் விமர்சித்துள்ளார்.
பிஹாரில்
3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி
வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி
சார்பில் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் வேட்பாளராக
முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்த சிராக் பாஸ்வான்
வெளியேறி தனித்து போட்டியிடுகிறார். அவர் தொடர்ந்து ஐக்கிய ஜனதாதளக்
கட்சியை விமர்சித்து வருகிறார். இதற்கு ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் மூத்த
தலைவர் சஞ்சய் ஜா விமர்சித்தார்.
அவர் கூறுகையில் ''லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.
அவர் ஐக்கிய ஜனதாதள கட்சியின் மீது அவர் கூறும்
குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது. மற்றவர்களின் தாளத்திற்கு ஏற்ப சிராக்
பாஸ்வான் நடனமாடுகிறார்.'' என்றார்.
இதற்கு லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
மற்றவர்களின் தாளத்திற்கு ஏற்ப சிராக் பாஸ்வான் நடனமாடுகிறார் என ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ஜா கூறியுள்ளார். இதன் மூலம் பிரதமர் மோடியை ஐக்கிய ஜனதாதளக் கட்சி அவமானப் படுத்தி விட்டது.'' எனக் கூறினார்.
No comments:
Post a Comment