
சிலிகுரி: ''குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்,''
என, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க
மாநிலத்துக்கு வந்துள்ள, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சிலிகுரியில்
நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக,
சி.ஏ.ஏ., எனப்படும், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த தாமதம்
ஆகிறது. வைரஸ் பாதிப்புகள்தற்போது குறைந்து வருகிறது. நல்ல சூழ்நிலை
திரும்புவதால், சி.ஏ.ஏ.,வை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை வகுக்கும்
பணிகள் நடந்து வருகின்றன.சி.ஏ.ஏ., விரைவில் அமல்படுத்தப்படும்.முதல்வர்
மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, பிரித்தாளும் அரசியலில்
ஈடுபட்டு வருகிறது.
திரிணமுல் காங்., அரசு மீது, மக்கள் அதிருப்தியில்
உள்ளதால், 2021 சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, ஆட்சி
அமைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment