
வாஷிங்டன்: உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அணு ஆயுதம் அமெரிக்காவிடம்
உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் பத்திரிக்கையாளர்
பாப் உட்வர்ட், டிரம்ப் குறித்து Rage என்ற புத்தகத்தினை எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் வரும் 15ல் வெளியாக உள்ளது. அதில் உட்வர்டுடன் டிரம்ப் பேசிய
தகவல்களும் இடம் பெற்றுள்ளன.அதில் உள்ள தகவல்களில் படி, உலகில் இதற்கு
முன் யாரிடமும் இல்லாத அணு ஆயுதம் அமெரிக்காவிடம் உள்ளதாக டிரம்ப்
கூறியுள்ளார். 'ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி செங் கூட இதற்கு
முன் கேள்விப்படாத பொருள் அது. அந்த ஆயுதம் 2018 ம் ஆண்டு பிப்ரவரி மாதம்
அமெரிக்க அணு ஆயுதக் களஞ்சியத்துடன் இணைக்கப்பட்டது' இவ்வாறு டிரம்ப்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment