
சென்னை, சூளையில் தொழிலதிபர் வீட்டில் பூட்டை உடைத்து 45 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சென்னையை சூளையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கிரிட் ஷா (59) சௌக்கார்பேட்டையில் கண்ணாடி கடை நடத்தி வருகிறார்.
இவரது வீட்டில் பாடாளம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி என்பவர் மகன் 2012ம் ஆண்டு முதல் பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறார்.
கொரோனா காரணமாக வீட்டு பகுதி அடைக்கப்பட்டிருந்ததால் ஆனந்தி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வேலைக்கு வரவில்லை.
இந்த நிலையில், ஜனவரி மாதம் தனது வீட்டின் பெட்ரூம் பீரோவில் 50 லட்ச ரூபாய் பணத்தை வைத்ததாகவும், அதில் 44 லட்சத்தை காணவில்லை என்றும் கிரிட் ஷா புகார் அளித்துள்ளார்.

கபோர்டின் சாவி அருகிலேயே இருக்கும் என்பதால், பணிப்பெண் மீது சந்தேகம் உள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
புகாரை பெற்றுக் கொண்ட வேப்பேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலைக்கு
வராத பணிப்பெண் எப்படி நகைகளை திருடினார் அல்லது இதில் ஏதாவது சந்தேகப்
படும்படியான தகவல்கள் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment