
ஊரடங்கு நேரத்தில் தனியாக போன மைனர் பெண்ணை டிவி ஊழியர்கள்,போலீசார் உள்பட எட்டு பேர் சேர்ந்து கெடுத்த சம்பவம் அதிர்ச்சியலையை உண்டாக்கியுள்ளது
ஒடிஷா மாநிலம்
புவனேஸ்வரில் உள்ள மஹிலா பகுதியில் ஒரு மைனர் சிறுமி இரண்டு மாதங்களுக்கு
முன்பு ஊரடங்கு நேரத்தில் தனியாக இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்தார்
.அப்போது அந்த சிறுமியிடம் அங்கு காவலுக்கு நின்றிருந்த போலீஸ்க்காரர்கள்
இந்த நேரத்தில் எங்கே போகிறாய் என்று கேட்டு விசாரிக்க வேண்டுமென்று கூறி
ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சென்றனர் .அப்போது அங்கே ஒரு தொலைக்காட்சியில் வேலை
செய்யும் இரண்டு நபர்களும் இருந்தனர் .அந்த போலீசுடன் அந்த தொலைக்காட்சி
ஊழியர்களும் சென்றனர் .
.
அங்கிருந்த மேலும் சிலரும் சேர்ந்து அந்த சிறுமியை
ஒரு தனிமையான இடத்திற்கு கூட்டி சென்று மொத்தம் எட்டு பேர் சேர்ந்து அந்த
சிறுமியை பாலியல் பலத்காரம் செய்து விட்டு அவரை அங்கேயே விட்டு விட்டு ஓடி
விட்டார்கள் .
இந்த விஷவயதை அந்த சிறுமி அவர்களுக்கு பயந்துகொண்டு
இரண்டு மாதங்களாக யாரிடமும் சொல்லாமல் ஒளித்து வைத்திருந்தார் .ஆனால்
ஆகஸ்டு மாதம் 30ம் தேதி தனது தந்தையிடம் கூறியதும் ,அவரின் தந்தை அந்த
சிறுமியை அழைத்துக்கொண்டு அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார் .பிறகு
போலிஸார் அந்த சிறுமியின் வாக்கு மூலத்தை வாங்கிக்கொண்டு அவரை மருத்தவ
பரிசோதனைக்கு அனுப்பினார்கள் ,பிறகு குற்றவாளிகளை போலீசார் தேடி
வருகிறார்கள்

No comments:
Post a Comment