
அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகி வருவதால், 2,100-ம் ஆண்டுக்குள் கடல் மட்டம் 38 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவு உயரும் என, நாசா தலைமையிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சுற்றுச்சூழலில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. அதனால் கடல் மட்டம் உயர்ந்து வருவது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்நிலையில் அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்தில் பனிக்கட்டிகள் உருகி வருவதால், கடல் மட்டம் 38 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவு உயர வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகி வருவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை வைத்தே இதனை கணக்கிட்டுள்ளனர். இனி வரும் காலத்தில் பனிக்கட்டிகள் உருகுவதை பொறுத்தே, கடல் மட்டம் உயரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் 2,100ம் ஆண்டுக்குள் கிரீன்லாந்தில் உருகும் பனிக்கட்டிகளால் மட்டும் 9 செ.மீ கடல் மட்டம் உயரும் என கணித்துள்ளனர்.
No comments:
Post a Comment