
மதுரை காமராஜர் சாலையில் தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கூட்டறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவிலயே முதன்முறையாக செய்தியாளர்களுக்கான சிக்கன கூட்டுறவு நாணய சங்கம் அமைத்துக் கொடுத்துள்ளோம். பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சட்டம் குறித்து வரும் கூட்ட தொடரில் வலியுறுத்துவோம் என்றார்.
தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி இன்றி ஆட்சி அமைக்கமுடியாது என்ற ஹெச்.ராஜாவின் கருத்து குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது, கட்சி வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அவ்வாறு கூறுகின்றனர்.

பாஜக டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும், தமிழகத்தில் ஏதேனும் ஒரு திராவிட கட்சியில் தான் சவாரி செய்ய முடியும். தமிழகத்தில் அக்கட்சி இன்னும் வளர வேண்டும்.
மேலும், மோடி போன்ற பிரதமர் யாரும் இல்லை என்றும் மனிதநேயமிக்க பிரதமர் மோடி மட்டும் தான் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
newstm.in
No comments:
Post a Comment