Latest News

  

தமிழகத்தில் மீண்டும் உச்சத்தை தொட்ட கொரோனா.. புதிதாக 6,352 பேருக்கு தொற்று உறுதி.!!!

தமிழகத்தில் இன்று (ஆக.,29) 6,352 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,15,590 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் இன்று மட்டும் 80,988 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 46,54,797 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று மட்டும் 6,045 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 55 ஆயிரத்து 727 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 87 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7,137ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 52,726 பேர் சிகிச்சை பெற்று வருகின்ன்றனர்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.