புதுடில்லி : தெலுங்கானாவின் மேம்பாட்டு திட்டத்திற்கு நிலுவையில் உள்ள
நிதியை வழங்குமாறு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை சந்தித்து மாநில
அமைச்சர் கே.டி ராமாராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.தெலுங்கானாவில் நகர்ப்புற
மேம்பாட்டிற்காக பல்வேறு மத்திய நிதியுதவி திட்டங்களின் கீழ் நிலுவையில்
உள்ள ரூ. 2,537.81 கோடியை உடனடியாக மாநிலத்திற்கு வழங்குமாறு நகராட்சி
மற்றும் தொழில்நுட்பதுறை அமைச்சர் கே.டி ராமாராவ் மத்திய அரசை
வலியுறுத்தினார். இது தொடர்பாக ராமாராவ், நேற்று ( ஆக.,24 ) டில்லியில்
உள்ள நிர்மன் பவனில், சிவில் விமானபோக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங்
பூரியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மாநிலத்தின் நலதிட்டங்கள்
குறித்தும், வாரங்கலில் விமானநிலையம் அமைப்பதற்கான கோரிக்கையையும்
எழுப்பினார்.அமைச்சருடனான சநதிப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் அமைச்சர்
ராமாராவ் கூறுகையில், ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் மாநிலத்திற்கு ரூ.
217 கோடியும், மத்திய அரசிடமிருந்து அம்ருத் திட்டத்தின்
கீழ் ரூ. 351.77 செலுத்த வேண்டியிருக்கிறது. ஹைதராபாத்திற்கு மில்லியன் +
நகர பிரிவின் கீழ் வழங்கப்படவுள்ள 783 கோடி ரூபாயும், மேலும் இரண்டு
நகரங்களும் 15 வது நிதி ஆணையத்திடம் நிலுவையில் உள்ளன. இந்த நிதியை
வழங்கவும், மாநிலத்தின் 2BHK ( housing scheme ) வீட்டு வசதி
திட்டத்திற்கும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
மேலும் 1.4 லட்சம் பேருக்கு வீடு கட்டுவதாக தகவல் அளிக்கும் அதே வேளையில், 1184 கோடி ரூபாயை கோரியுள்ளேன். தெலுங்கானாவில் ஐதராபாத்திற்கு அடுத்த பெரிய நகரமாக வாரங்கல் உள்ளது. உதான் திட்டத்தின் கீழ் வாரங்கலில் உள்ள மம்னூர் விமான நிலையத்தை சேர்த்து அதன் மறுவடிவமைப்பை மேற்கொள்ளவும், சிவில் விமான போக்குவரத்து அமைச்சரை மாநில அரசு வலியுறுத்துகிறது. மாநிலத்தில் முன்மொழியப்பட்ட மற்ற ஆறு விமான நிலையங்களுக்கு மாறாக, அங்குள்ள உள்கட்டமைப்பு மேம்பட்ட நிலையில் இருப்பதால், மம்னூர் விமான நிலையம் மாநில அரசுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
இது தொடர்பாக அரசின் குழு 10 நாட்களில் கணக்கெடுப்பு நடத்தும். அதன்பின் விரைவில் விமான நிலையத்திற்கு தேவையான பணிகளை மேற்கொள்ளலாம் என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். விரைவில் வாரங்கல் நகர மக்களுக்கு இது குறித்து அறிவிப்பு செய்யப்படும்.மேலும் தரையிறங்கும் பகுதி, மற்றும் ஓடுபாதையை நீட்டிக்குமாறு அரசு முன்பு கோரியிருந்தது. இது மத்திய குழு அதன் வருகைக்குப் பிறகு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும். இதற்கிடையில், சிரிசில்லா மாவட்டத்தின் எம்.எல்.ஏ அரசின் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சக அதிகாரிகளுக்கு ஹர்தீப் சிங் பூரி வழிநடத்தியதற்கு நன்றி தெரிவித்தார்.

No comments:
Post a Comment