
புதுடில்லி: 'கருத்துச் சுதந்திரம் என்பது நீதித்துறையின் பலம். இது
நீதிமன்றத்தை அவமதிப்பதாக ஆகாது' என பிரசாந்த் பூஷன் டுவிட்டரில்
பதிவிட்டுள்ளார்.மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன், சமீபத்தில், உச்ச
நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் கடுமையாக விமர்சித்து, சமூக வலைதளமான,
'டுவிட்டரில்' கருத்து தெரிவித்திருந்தார். 'கடந்த, ஆறு ஆண்டுகளில்
நாட்டின் ஜனநாயகத்தை அழிப்பதில், உச்ச நீதிமன்றத்துக்கும் பங்கு உள்ளது'
என, அதில் அவர் தெரிவித்திருந்தார்.இதையடுத்து, பிரசாந்த் பூஷனுக்கு
எதிராக, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை
தொடர்ந்தது. இந்நிலையில், பிரசாந்த் பூஷன், மூத்த பத்திரிகையாளர்,
என்.ராம், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி உள்ளிட்டோர், 'கோர்ட்
அவமதிப்பு சட்டம், பேச்சு சுதந்திரத்துக்கும், அரசியல் சாசனத்துக்கும்
எதிரானது; அதை ரத்து செய்ய வேண்டும்' என, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்துள்ளனர்.இந்நிலையில், பிரசாந்த் பூஷன் தனது டுவிட்டர் பக்கத்தில்
பதிவிட்டுள்ளதாவது: நீதிபதிகள் மீதான விமர்சனம் நீதிமன்றத்தின் மீதான
விமர்சனமாக மாறிவிடாது.
தலைமை நீதிபதியின் நடவடிக்கையையோ அல்லது தலைமை நீதிபதிகள்
அடுத்தடுத்து வருவதை விமர்சிப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாக ஆகாது. நான்
டுவிட் செய்தது, கடந்த ஆண்டுகளில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளை
தான்.கருத்து சுதந்திரம் மற்றும் விமர்சிக்கும் உரிமை ஆகியவை
நீதித்துறையின் பலம். இது நீதிமன்றத்தை அவமதிப்பதாகவோ அல்லது
நீதிமன்றத்தின் கவுரவத்தை எந்த வகையிலும் குறைக்கவோ செய்யாது. இவ்வாறு அவர்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment