
டெல்லி: குஜராத் மாநிலத்தின், வல்சாத் மாவட்டத்தில், ரசாயன ஆலையில் பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 8 தீயணைப்பு படை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
வலசாத் மாவட்டத்திலுள்ள வபி என்ற நகரில் உள்ள ஆலையில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள் 8 வாகனங்களில் விரைந்து சென்று, தீயணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். பெரிய அளவுக்கான புகை வெளியேறியதை பார்க்க முடிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
நல்ல வேளை.. ராஞ்சியில் விமானம் மீது பறவை மோதல்... விபத்து தவிர்ப்பு... பயணிகள் தப்பினர்!!
சேத விவரம் குறித்த எந்த தகவலும் உடனுக்குடன் வெளியாகவில்லை.
லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் அமோனியம் நைட்ரேட் வெடிப்பு காரணமாக பலர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னையிலுள்ள கெமிக்கல் ஆய்வகங்களில் அதிகாரிகள் தீவிர பரிசோதனைகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
source: oneindia.com
No comments:
Post a Comment