
தமிழகம், கோவா, டெல்லி, திரிபுரா ஆகிய மாநிலங்கள் கொரோனா பரிசோதனையை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 18,55,745 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை 38,938 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 12,30,509 பேர் குணமடைந்துள்ளனர். ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு தற்போது இறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறியுள்ளது. அதாவது இறப்பு விகிதம் 2.10 சதவீதமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனைகளை அதிகரித்தல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக தனிமைப்படுத்துதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சில மாநிலங்கள் கொரோனா மருத்துவ பரிசோதனையை அதிகரித்துள்ளன.அந்த வகையில் தமிழ்நாடு, கோவா, டெல்லி, திரிபுரா ஆகிய மாநிலங்கள் பரிசோதனையை அதிகப்படுத்தியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2 கோடிக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6.6 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment