
சென்னை: கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட
கருப்பர் கூட்டம் யு டியூப் சேனல் அலுவலகத்துக்கு மத்திய குற்றப்பிரிவு
போலீசார் சீல் வைத்தனர்.ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில்,
கருப்பர் கூட்டம் என்ற, 'யு டியூப் சேனலில்' கந்த சஷ்டி கவசத்தை, ஆபாசமாக
சித்தரித்து, வீடியோ வெளியிடப்பட்டது. தொடர்ந்து, ஹிந்துக்கள் பற்றியும்,
அவர்கள் வழிபடும் கடவுள்கள் பற்றியும், அவதுாறு பரப்பி, பேட்டிகள் மற்றும்
வீடியோக்கள் வெளியிடப்பட்டதால், சமூக விரோதிகள் மீது, கடும் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து 'கருப்பர் கூட்டம்'
யு டியூப் சேனலை நடத்தி வரும், சுரேந்தர் நடராஜன் புதுச்சேரி மாநிலம்,
அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேசனில் சரணடைந்தார், சேனல் நிர்வாகி
செந்தில்வாசன் கைது செய்யப்பட்டார்.செந்தில்வாசனிடம் நடத்திய விசாரணையில்
கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச்
செயல்பட்டு வந்த சென்னை தி.நகர், நியூபோக் சாலையில் உள்ள அலுவலகத்தில்
மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்தனர்.
அதில் ஹார்ட்டிஸ்க், பென் டிரைவ், லேப்டாப்
உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர். மேலும், மத்திய குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி
மற்றும் உதவி ஆணையர் தலைமையில் அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்துச்
சென்றனர். தற்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஒரு போலீஸ்
நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment