பாட்னா: தோசை சுட்ட அம்மாவை, துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டார் மகன்.. இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
பீகாரின் பாட்னாவில் சீதாபூர் என்ற கிராமம் உள்ளது... இங்கு வசித்து வந்தவர் மஞ்சுதேவி.. இவரது மகன் யாதவ்.. 20 வயதாகிறது.
சம்பவத்தன்று
இரவு 10.30-மணிக்கு யாதவ், தன் வீட்டு வாசலில் நண்பர்களுடன் போனில் பேசி
கொண்டிருந்தார்.. அப்போது அவரது அம்மா, சுடசுட தோசையை சுட்டு எடுத்து
கொண்டு வந்து அவரிடம் நீட்டினார்.. அதை பார்த்த யாதவ், அங்கே வெச்சிட்டு போ
என்று போனில் பேசிக் கொண்டே சொல்லி உள்ளார்.
ஆனால்,
தோசை ஆறிவிடும் என்பதால், "தோசை ஆறிட்டு இருக்கு.. உள்ளே வந்து
சாப்பிட்டு, அப்பறம் போன் பேசு" என்று சொல்லி உள்ளார்.
அதை யாதவ் காதிலேயே வாங்காமல் போனிலேயே மூழ்கி கிடந்தார்.. அதனால் மஞ்சுதேவி மறுபடியும் மகனை சாப்பிட கூப்பிட்டார்.
இதில்தான்
யாதவ் கடுப்பாகி விட்டார்.. இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து
அம்மாவை பொட்டென சுட்டுவிட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து
மஞ்சுதேவி சுருண்டு விழுந்தார்.. உடனடியாக உறவினர்கள், அக்கம்பக்கத்தினர்
விரைந்து வந்து அவரை மீட்டு பக்கத்திலுள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்..
அங்கு ஆபத்தான நிலையில் மஞ்சுதேவிக்கு சிகிச்சை நடந்து வருகிறது.
தகவலறிந்து
போலீசாரும் வந்துவிட்டனர்.. மகன் யாதவை கைது செய்து அவரிடமிருந்த
துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.
சாப்பாடு ஆறிபோய்விடும் என்று கூப்பிட்டதற்காக, பெற்ற தாயை மகன்
துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
source: oneindia.com

No comments:
Post a Comment