
இன்று ஈரோட்டில் ரூ.53.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை
வழங்கினார் முதல்வர் பழனிசாமி. ரூ.97.85 கோடி மதிப்பிலான 15-க்கும்
மேற்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து, அங்கு
செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ;
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா
தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஈரோடு பவானியாற்றில் 7
இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும். கோபிச்செட்டிபாளையத்தில் புறவழிச்சாலை
அமைக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.
அப்போது
, எடப்பாடி பகுதியை மாவட்டமாக்கும் திட்டம் உள்ளதா ? என்ற கேள்விக்கு
பதில் அளித்த முதல்வர் தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என
திட்டவட்டமாக கூறினார்.
தமிழகத்தில், கடந்த 2009-ஆம் ஆண்டு திருப்பூர்
மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த ஆண்டு தான் தமிழகத்தில்
கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி , திருப்பத்தூர் மற்றும்
இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களாக உருவாக்கப்பட்டது.
கடந்த மார்ச்
மாதம் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து புதியதாக மயிலாடுதுறை மாவட்டம்
உருவாக்கப்பட்டது.இதனால், தமிழகத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 38
உயர்ந்தது என்பது குறிப்பித்ததக்கது.
Newstm.in
No comments:
Post a Comment