
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதற்கான முயற்சிகளில் உலகின் பல நாடுகளில் விஞ்ஞானிகள் இறங்கி இருக்கின்றனர். இப்போது இருக்கும் சூழலில் கொரோனா பரவுவதை தடுக்க முகக்கவசம் அணிவது முக்கியமான ஒன்றாகும். மாஸ்க் அணிந்தால் வைரஸ் பரவுவதை தடுக்கமுடியும்.
ஆகவே அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வெளியிடங்களில் முகக்கவசம் இன்றி நடமாடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தெரியவந்துள்ளதால் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதங்களும் விதிக்கப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, குஜராத் மாநிலத்திலும் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் மக்கள் முகக்கவசம் அணியாமல் இருந்து வருகின்றனர். அதன் காரணமாக அம்மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகமாகி வருவதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கிய குஜராத் மாநில அரசு, மீறும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தையும் உயர்த்தியுள்ளது. அதன்படி மாநிலத்தில் முகக்வசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் அபராதமானது 200 ரூபாயில் இருந்து 500 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை ஆகஸ்ட் 1 முதல் மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
Newstm.in
No comments:
Post a Comment