
பூந்தமல்லியில் ஒரே நாளில் மத்திய ரிசர்வ் படை போலீசார் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில்
கொரோனா தொற்று தினந்தோறும் அதிகரித்து வருகிறது. சென்னை பூந்தமல்லியை
அடுத்த கரையான் சாவடியில் மத்திய ரிசர்வ் படையின் 77வது பட்டாலியன் பிரிவு
அமைந்துள்ளது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் படை போலீசார்
பணியாற்று கின்றனர்.
இவர்களில் 47
பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 30 பேருக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆவடியில் உள்ள
மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மத்திய ரிசர்வ் படை போலீசார் 30
பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சில
தினங்களுக்கு முன்பு பூந்தமல்லியில் துணிக்கடை ஒன்றில் பணிபுரியும்
ஊழியர்கள் 50 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது
குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment