புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தல்
முடிவு நேற்றிரவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 19 எம்பி பதவிக்கான
தேர்தலில் பாஜகவுக்கு 8 இடங்களும், காங்கிரசுக்கு 4 இடங்களும் கிடைத்தன.
குஜராத் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை முடிவு நேற்றிரவு தாமதமாக
அறிவிக்கப்பட்டது. மாநிலங்களவையில் காலியாக உள்ள 19 உறுப்பினர்களுக்கான
தேர்தல் நேற்று நடந்தது. அதன்படி, ஆந்திரா, குஜராத் மாநிலத்தில் தலா 4
இடங்கள், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் தலா 3 இடங்கள், ஜார்க்கண்டில் 2
இடங்கள், மணிப்பூர், மிசோரம் மற்றும் மேகாலயத்தில் தலா 1 இடம் என மொத்தம்
19 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் முடிந்து நேற்றே முடிவுகள்
அறிவிக்கப்பட்டன.
மொத்தமுள்ள 19 மாநிலங்களவை இடங்களில் எட்டு இடங்களில் பாஜகவும், காங்கிரஸ் நான்கு இடங்களிலும் வெற்றிகளைப் பெற்றது.
அதாவது, குஜராத்தில் நான்கு இடங்களில் மூன்று இடங்களையும், மத்திய பிரதேசத்தில் மூன்று இடங்களில் இரண்டு இடங்களையும், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் மணிப்பூரில் தலா ஒரு இடத்தையும் பாஜக வென்றது. சமீபத்தில் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் சேரந்த் ஜோதிராதித்யா சிந்தியா, மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு முதல் முறையாக செல்கிறார். மணிப்பூரில் பாஜகவின் வேட்பாளர் லீசெம்பா சனாஜோபா வெற்றி, அதிருப்தி எம்எல்ஏக்களால் ஒரு ஓட்டில் வெற்றியை தீர்மானித்தது. லீசெம்பா மற்றும் ஜோதிராதித்யா சிந்தியா தவிர, பாஜக-வைச் சேர்ந்த அபய் பரத்வாஜ், ரமிலாபென் பரா, நர்ஹரி அமீன் (அனைவரும் குஜராத்), சுமர் சிங் சோலங்கி (மத்தியப் பிரதேசம்), ராஜேந்திர கெலாட் (ராஜஸ்தான்), தீபக் ஆச்சார்யா (ஜார்கண்ட்) ஆகிேயார் வெற்றிப் பெற்றனர். குஜராத் தேர்தல் முடிவு நேற்றிரவு 10 மணிக்கு மேல் அறிவிக்கப்பட்டது. அதில், குஜராத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் பாரத்சிங் சோலங்கி தோல்வியடைந்தார். அங்கு மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை விட்டு விலகியதால், அவரது தோல்விக்கு வழிவகுத்தது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ராஜஸ்தானில் இருந்து தேர்வாகி உள்ளார். காங்கிரசின் கட்சியின் திக்விஜய் சிங் (மத்தியப் பிரதேசம்), சக்திசிங் கோஹில் (குஜராத்), நீரஜ் டாங்கி (ராஜஸ்தான்) ஆகியோர் தேர்வாகி உள்ளனர். ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியை பொருத்தவரை ஆந்திராவில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் நான்கு இடங்களையும் வென்றது. ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியின் பில்லி சுபாசந்திர போஸ், வெங்கட ரமணா, பரிமல் நாத்வானி மற்றும் அயோத்தி ராமி ரெட்டி ஆகியோரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவர் சிபு சோரன் ஜார்க்கண்டிலிருந்தும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் வான்வீரோய் கார்லுகி, மிசோரமில் மிசோ தேசிய முன்னணி வேட்பாளர் கன்லல்வேனா ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்தாண்டில் (2020) 20 மாநிலங்களில் 61 காலியிடங்களுக்கு நடந்த தேர்தலில் 43 பேர் முதன்முறையாக மாநிலங்களவையில் நுழைகின்றனர். மொத்த இடங்களில் 42 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment